pragash

பில்லா-2 வெளியீட்டுடன் கார்த்தி ஆடும் சகுனியாட்டம்…

ட்விட்டர் மூலம் சொல்லப்பட்ட செய்தியின் தமிழ் வடிவம் இது தான் “பில்லா-2 வெளியீடு ஜூலை மாதத்திற்கு மாற்றப்ட்டுள்ளது,சகுனியுடன் வரும் போட்டியினை தவிர்ப்பதற்கு…” இது தொடர்பாகத்தான் இந்தப்பதிவு.தமிழ் சினிமாவில் இந்த வருட எதிர்பார்ப்புக்குரிய படங்களின் வருகைகள் பெப்சி தொழிற்சங்கத்தின் பிரச்சினையால் பிற்போடப்பட்டு ஒருவழியாக வெளியீட்டுத்திகதிகள் அறிவிக்கபட்டு வருகின்றன.இந்த வருட ஆரம்பத்தில் நண்பன் மட்டுமே அதிகமாய் எதிர்பார்க்கப்பட்டு குறிப்பிட்ட திகதியில் வெளியாகி இருந்தது. விஸ்வரூபம், கோச்சடையான்,துப்பாக்கி,பில்லா-2,மாற்றான் போன்ற படங்கள் எதிர்பார்க்கும் லிஸ்ட்டில் இடம் பிடித்திருந்தன.நிலைமை இவ்வாறிருக்க இன்றைய தேதியில் சூடான செய்தி ஜூன் மாதம் வெளியாக இருந்த பில்லா-2 கார்த்தியின் சகுனி வெளியீட்டினால் அதன் வெளியீட்டுத்திகதி மீண்டும் ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றது.சாதாரணமாய் வருடத்தில் மூன்று நான்கு தடவைகள் ஒன்றிற்கு மேற்பட்ட படங்கள் சந்திப்பதும் மோதிக்கொள்வதும் சகஜமான ஒன்று.ரசிகர்கள் பாடு தான் திண்டாட்டம் கலந்த கொண்டாட்டம்.தியேட்டர் போய் அலுத்தே போய்விடும்.

Read more…

கலகலப்பு @ மசாலா கபே

இயக்குநர் சுந்தர் சி சிறிய இடைவெளியின் பின் மீண்டும் நடிகன் அல்லாத இயக்குநராக இந்தப்படத்தின் மூலம் தனது வழமையான பாணியில் நகைச்சுவை கலந்த மசாலா கதையினை நம்பி களமிறங்கியிருக்கிறார்.ஒரு முன்னணி இயக்குநராக தமிழ் சினிமாவில் ஜொலித்த சுந்தர் சியினை நடிகனாக ஏற்றுக்கொள்ள ரசிகர்கள் தயங்கியிருந்தாலும் மீண்டும் ஒருமுறை வெற்றி இயக்குநராக வலம் வரும் வாய்ப்பினை மசாலா கபே வழங்கியிருக்கின்றது.இயக்குநர் முழுக்க முழுக்க நகைச்சுவையினை வைத்தே படத்தினை நகர்த்தியிருக்கிறார்.கும்பகோணம் பகுதியில் மூன்று தலை முறையாக மசாலா கபே என்னும் ஹோட்டல் வியாபாரம் செய்து வரும் குடும்பத்தின் வாரிசுகள் விமல் மற்றும் சிவா. அவர்களின் காதலிகள் முறையே “அங்காடித்தெரு” அஞ்சலி மற்றும் “களவாணி” ஓவியா.விமல் பொறுப்பான புள்ள. சிவா திருட்டு பேர்வழி.தலை முறை மாற்றங்களால் மசாலா கபே காத்து வாங்குகிறது. தள்ளாடும் மசாலா கபேயினை விற்க மறுத்து அதனை மீண்டும் நிமிர்த்த விமல் படாத பாடு படுகிறார்.மசாலா கபெயினை அடைய போலீஸ் துணையுடன் முயற்சி நடக்கிறது. சூதாட்டத்திற்கு அடிமையான சிவா எதிரியின் வஞ்சனையில் சிக்கி ஓட்டலினை இழக்கிறார்.அதன் பின் இருவரும் இணைந்து மசாலா கபெயினை எப்படி மீட்கிறார்கள்..?நாயகிகளுடன் இணைய எப்படி போராடுகிறார்கள் என்பதனை கலகலப்பாக சொல்லி சுபமாக முடித்திருக்கிறார் சுந்தர் சி.

Read more…

இசையால் வருடும் இசைஞானி…..பாகம்-02

காலத்தை இசையால் வென்று அன்னக்கிளியில் ஆரம்பித்து நீ தானே என் பொன் வசந்தம்(இசை வெகுவிரைவில்..) வரைக்கும் அன்றிலிருந்து இன்று வரை அனைத்து தரப்பு இசை ரசிகர்களும் ரசிக்கும் வண்ணம் பாடல்களுக்கு இசை வழங்கிய இசைஞானியின் அநேக பாடல்கள் என்னை கவந்தவை.இருப்பினும் நான் மீண்டும் மீண்டும் ரசித்து பாடலோடு ஒட்டி உறவாடி உருகிய ஒரு சில அற்புதமான பாடல்களின் தொகுப்பினை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..

Read more…

இசையால் வருடும் இசைஞானி…..பாகம்-01

இசை என்னும் பதத்தினை எனக்குள் உணர வைத்து உருக வைத்து மெய் மறந்து ரசிக்க வைத்து முதன் முதலாய் திரையிசை பாடல்கள் பக்கமாய் என்னை திருப்பிய இசைஞானி இளையராஜா அவர்களது இசையில் உருவாகி என்னை வெகுவாக கவர்ந்து இன்னமும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் பாடல்கள் பற்றிய தொகுப்பினை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக இந்தத்தொடர் பதிவு..

Read more…

வழக்கு எண் 18 /9

UTV motion pictures மற்றும் இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதேர்ஸ் கூட்டுத்தயாரிப்பில் காதல்,கல்லூரி புகழ் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் முற்றிலும் புதுமுகங்களின் நடிப்பில் “நல்ல திரைப்படம்” என்ற சான்றிதழ் பல திரையுலக பிரமுகர்களால் வழங்கப்பட்டு,2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கபட்ட இந்தப்படம் பாரிய இழுபறிகளின் பின் ஒரு வழியாக 2012 இல் வெளியாகி இருக்கிறது.படம் வெளியாகு முன்னரே எதிர்பார்ப்பினை கூட்டும் விதமாக பல தகவல்கள் கசிந்த வண்ணம் இருந்தது.குறிப்பாக படம் செய்தியாளர்கள் மற்றும் பிரபலங்களுக்கு முதலில் திரையிட்டு காட்டப்பட்டதாகவும் அதன் போது செய்தியாளர்களின் பாராட்டு மழையில் இயக்குனர் பாலாஜி சக்திவேல் நனைந்ததாகவும் இயக்குனர் பாலுமகேந்திரா அவர்கள் பாலாஜி சக்திவேல் காலில் விழவேண்டும் என்று கூறியதாகவும்,இயக்குனர் லிங்குசாமி அதிக தடவைகள் பார்த்த திரைப்படம் என்ற பெருமையை பெறுவதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தன.

Read more…