தமிழ் சினிமாவில் தடம் மாறும் மனிதநேயம்…பிரபல நடிகர்களின் உண்மை முகங்கள் மீது ஒரு பார்வை….
இளையதளபதி விஜய்
ஆரம்பத்திலே அனைவருக்கும் ஒரு உண்மையை சொல்லி விட்டு பதிவிற்குள் நுழைகிறேன்.நான் ஒரு விஜய் பக்தன்,விஜய் வெறியன்,இன்றும் என்றும் எப்போதும் என்னுடைய தலைவன் இளையதளபதி நடிகர் விஜய் மட்டும் தான்.இன்றைய தேதியில் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் பாணியில் தன்னை முற்றிலும் நிலை நிறுத்தி அவருக்கு அடுத்தபடியாக உலகம் முழுதும் வாழும் தமிழர்கள் மத்தியில் அபிமானம் மற்றும் எதிர்பார்ப்பினை பெற்ற ஒரே நடிகர் மற்றும் அடுத்த சூப்பர் ஸ்டார் ஆவதற்குரிய அனைத்து தகுதிகளையும் தனது இருபது வருட கடுமையான உழைப்பின் மூலம் தன்னகத்தே வளர்த்துக் கொண்ட தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திர நாயகன் இளையதளபதி நடிகர் விஜய் என்றால் அது எந்தவிதத்திலும் மிகையல்ல.அஜித்குமார்,மற்றும் சூர்யா அடுத்த அடுத்த நிலைகளில் இருந்தாலும் காவலன், வேலாயுதம்,நண்பன் என தொடர்ந்து விஜய் கொடுத்த வெற்றியால் இன்னும் அவரை நெருங்க முடியவில்லை. எனினும் சினிமாவில் அனைத்துமே தற்காலிகமானவை தான். நாளை கூட இன்றைய விஜயின் இடம் தலயிடம் கை மாறலாம்.அது இன்னொரு நாள் சூர்யாவினால் பறிக்கப்படலாம்.வெற்றி, தோல்வி, பணம், புகழ் அனைத்துமே சினிமாவில் நிரந்தரம் இல்லாதவை. எனினும் பொதுவாக சில விடயங்களை ரசிகன் என்பதற்கும் அப்பால் சென்று அலசுகிறேன்.
மிகவும் பரபரப்பாக ஊடகங்களினால் கையாளப்பட்ட ஒரு விடயம் விஜயின் அரசியல் பிரவேசம். இப்போது தற்காலிகமாக அது பற்றிய பேச்சுக்கள் படிப்படியாக குறைவடைந்திருந்தாலும் திரைமறைவில் பாரிய ஏற்பாடுகள் நாளாந்தம் நடை பெற்றுக்கொண்டு தானிருக்கின்றன.குறிப்பாக விஜயின் தந்தை பிரபல இயக்குநர் சந்திரசேகரன் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து மிகுந்த அக்கறையுடன் இன்றும் செயற்பட்டுக்கொண்டுதானிருக்கிறார்.ஆரம்ப காலங்களில் ஏழைகளில் அக்கறை கொண்டு செயற்பட்ட விஜய் நற்பணி மன்றங்கள் எவ்வித சுயலாபமுமின்றி ஏராளமான உதவிகளை வழங்கியிருந்தன.குறிப்பாக அதிக ஏழைகள் வாழ துன்பப்படும் தமிழ்நாட்டிற்கு இத்தகைய உதவிகள் இன்றளவிலும் தேவையாகத்தான் இருக்கின்றன.கல்வி உதவிகள்,ரத்ததான முகாம்கள்,இலவச திருமணங்கள்,உதவித்தொகைகள்,நிவாரணங்கள் என பல வழிகளிலும் தங்களின் தலைவன் மேல் கொண்ட பற்றினை,அதையும் தாண்டி விஜய் மேல் கொண்ட வெறியினை ரசிகர்கள் காட்டி நின்றார்கள்.இந்த நற்பணி மன்றங்கள் முழுமையாக விஜய் மேல் முரட்டு அன்பு கொண்ட அவரின் ரசிகர்களால் அவர்களின் பங்களிப்புடன் விஜயின் மேற்பார்வையில் “உழைத்திடு உயர்ந்திடு உன்னால் முடியும்” என்று சொல்லி சொல்லியே வளர்க்கப்பட்டன.
ஏறத்தாழ பத்து ஆண்டுகளாக ஊட்டி ஊட்டி வளர்க்கப்ட்ட வளர்ப்பு ஆடுகள் 2009 ஆம் ஆண்டளவில்(ஜூலை மாதம் 26 ஆம் திகதி புதுக்கோட்டையில்) இளையதளபதி விஜய் அவர்களின் குடும்பத்தின் முற்று முழுதான சுயலாபத்திற்காக அவர்களின் அரசியல் மோகத்திற்காக மக்கள் இயக்கம் என்னும் பெயரில் பலியாடுகளாக மாற்றப்பட்டன.அந்த வருடத்தின் ஆரம்பத்தில் தமிழரின் பரம எதிரியான காங்கிரஸ் கட்சியில் சேரும் முகமாக விஜய்-ராகுல் காந்தி சந்திப்பு இடம்பெற்றது விஜய் மேல் அன்பு கொண்டவர்களை சங்கடத்திற்கு ஆளாக்கி இருந்தது.ஏனோ பிற்காலத்தில் அது கை கூடவில்லை எனினும் அந்நிகழ்வின் பின்னால் விஜய் குடும்பம் தி.மு.க கட்சியின் ஆதரவாளர்கள் போல காட்டிக்கொள்ள ஆரம்பித்திருந்தார்கள்.விஜயின் தந்தை தி.மு.க விசுவாசியாக முன்னரே இருந்தவர்.காங்கிரஸில் இணையும் திட்டம் தமிழர்களின் எதிர்ப்பினால் அல்லது தி.மு.கவின் மிரட்டலால் கைவிடப்பட்டிருக்கலாம்.
2011 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் விஜய் தனது அரசியல் ஆசையினை பகிரங்கமாக வெளிப்படுத்தி இருந்தார்.அதனை அவர் தந்தையும் உறுதிப்படுத்தியிருந்தார்.ஒரு பக்கமாக விஜய் அரசியல் அடிகளை எடுத்து வைக்க மறுபக்கத்தில் அவரின் அரசியல் விளம்பரப்படங்கள் தோல்வியை சந்திக்க ஆரம்பத்திருந்தன.குறிப்பாக முழுக்க முழுக்க அரசியல் சாயம் பூசி எடுக்கபட்ட ஐம்பதாவது படம் சுறா படுதோல்வி அடைந்து விஜய் ரசிகர்களை கூட வெறுக்க வைத்தது.விஜய் ரசிகர்களின் நிலை அதுவென்றால் வீம்புக்கு விஜயை வெறுக்கும் அன்டி விஜய் கூட்டம் என்ன செய்திருக்குமென்று சொல்லித்தெரிய வேண்டியதில்லை.நடுநிலை தமிழ் சினிமா ரசிகர்கள் விஜய் படமென்றால் ஒரு மாதிரியாக பார்க்கும் நிலைமை உருவானது.வில்லு,சுறா போன்ற மோசமான படங்களை தந்த விஜயின் சினிமா வாழ்க்கை அரசியலால் ஆட்டம் காணத்தொடங்கியிருந்தது.குறிப்பாக அரசியல் ஆசையை ஒத்தி வைக்குமளவுக்கு தமிழ் திரையுலகு மோசமான வரவேற்பினை வழங்கியிருந்தது. முடிந்த வரையில் அரசியல் தொடர்பான கேள்விகளை தவிர்த்து வந்த விஜய் 2010 ஆம் ஆண்டு காவலன் படத்தை குறித்த நேரத்துக்கு வர விடாமல் உதயநிதி ஸ்டாலின் தியேட்டர்களை முடக்கி வைத்திருந்து பிரச்சனை பண்ண(மன்மதன் அம்பு வெளியீட்டிற்காக)மீண்டும் அரசியல் பற்றி சிந்திக்க தொடங்கியிருந்தார்.அதன் தொடர்ச்சியாக தி.மு.கவினை தூக்கி எறிந்து விட்டு அம்மாவிடம் சரணடைந்தார்.2011 தமிழக தேர்தலில் அ.தி.மு.க கட்சிக்கு விஜய் மக்கள் இயக்கம் ஆதரவளித்தது. காவலன் வெளியாகும் சமயம் அநேக விஜய் ரசிகர்கள் மத்தியில் விஜய் எப்படியாவது தி.மு.கவினை எதிர்க்க வேண்டுமென்ற நிலையே தோன்றி இருந்தது.வழமை போல தமிழ்நாட்டில் ஆட்சி மாற விஜய் பாடு கொண்டாட்டம்.
அரசியலுக்காய் இத்தனை நகர்வுகளை மேற்கொண்ட விஜய் செய்யும் தவறு என்ன..?நடிகன் என்னும் இளையதளபதிக்கு பின்னால் ஒளிந்திருக்கும் இன்னொரு முகம் சரியானதா..?விஜய் ரசிகர்கள் என் மீது தப்பான எண்ணம் கொண்டாலும் இதை எழுதுவது தவறாக எனக்கு தோன்றவில்லை..அப்பாவி மக்களுக்கும் ஏழைகளுக்கும் உதவிகளை செய்யுமாறு மக்கள் இயக்கத்தை தூண்டி விட்டு பின்னால் நின்று அரசியல் குளிர் காயும் வேலைகளை இன்றும் விஜய் செய்து கொண்டிருக்கிறார்.அவர் செய்யும் ஒவ்வொரு நலத்திட்டங்களும் உதவிகளும் இன்றும் தமிழ் நாடு முழுதும் போஸ்டர் ஒட்டி காட்டப்படுகிறது.விஜய் மக்களின் தலைவன் என்று காட்டும் நடவடிக்கைகளில் ஒரு படி மேலே போய் நாகர் கோவில் மீனவர்கள் கொலை செய்யப்பட உண்ணாவிரதம்,தமிழர்களுக்காய் உண்ணாவிரதம், லஞ்சத்தை ஒழிக்க வேண்டி டெல்லியில் உண்ணாவிரதம் இருந்த அண்ணா ஹசரேயுடன் சந்திப்பு, இலங்கை தமிழரை வைத்து விபச்சார அரசியல் செய்யும் தலைவர்களுடன் கூட்டு என எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்து விட்டார்.இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.விஜய்க்கு மட்டுமல்ல தமிழகத்தில் அரசியல் செய்யும் எவனுக்கும் தமிழ்,தமிழர் என்ற பதங்களை பேச்சில பயன்படுத்தக்கூட அருகதையில்லை.நடிகர்கள் அரசியல்வாதிகளாகி மக்கள் மனங்களில் வாழ்ந்த காலம் தமிழகத்தில் எம்.ஜி.ஆர் மடிந்ததுடன் மலையேறி விட்டது.இன்று சுயலாப அரசியல் செய்யும் திட்டத்துடன் தான் நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள்.தமிழகத்தில் மட்டுமல்ல ஏனைய மாநிலங்களில் கூட நடிகர்கள் அரசியலுக்கு நல்ல எண்ணத்துடன் வருவது அரிதாகவே நடக்கிறது.
அழகிய தமிழ் மகனே உங்களிடம் வேண்டுவதெல்லாம் மக்கள் இயக்கங்களை மீண்டும் நற்பணி மன்றங்கள் ஆக்குங்கள். கொடியினை தூக்கி வீசுங்கள்.வழமை போல உங்கள் சம்பளத்தின் 20 வீதத்தினை ஏழைகளுக்கு வழங்குங்கள்,புயலடித்தால் அனர்த்த நிவாரணம்,வெள்ளம் வந்தால் வெள்ள நிவாரணம் அனைத்தையும் அள்ளிக்கொடுங்கள்.ஆனால் அங்கும் அரசியல் நடத்தி விடாதீர்கள். முடிந்த வரை நீங்கள் செய்யும் உதவிகள் வெளியே தெரியாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.ஏழைகளை கட்டிப்பிடியுங்கள்,உங்கள் ரசிகன் அவதிப்பட்டால் ஓடிச்சென்று உதவுங்கள்.குடிசையில் உணவு உண்ணுங்கள் ஆனால் அதை மீடியாக்கு சூடான செய்தி என்று அனுப்பி விடாதீர்கள்.தமிழகத்தில் வாழும் சாதாரண ஒரு குடிமகனாய் உங்கள் குரல் தமிழனுக்காய் என்றும் ஒலிக்கவேண்டும். அரசியல்வாதியாய் தான் ஒலிக்கும் என்றால் நீங்களும் ஈழத்தமிழரை பொறுத்த வரையில் ஒரு ஈனப்பிறவி தான்.சினிமா வேறு அரசியல் வேறு என்னும் தெளிவு தமிழ் மக்களிடத்தில் நிறையவே உண்டு.கடந்த மூன்று படங்கள் போல இனியும் அரசியல் கலப்பில்லாத படங்களில் அசத்துங்கள்.ஒரு வேளை சாப்பிட காசு இல்லாதவன் கூட விஜய் ரசிகனாய் டிக்கெட் எடுத்து தியேட்டர் வருகிறான். அவர்களை திருப்தி படுத்தும் படங்களை தெரிவு செய்யுங்கள்.அரசியல் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நீங்கள் கேட்ட கடைசி கதை சுறாவாக இருக்கட்டும்.
அரசியல் என்ற வார்த்தைக்காக உங்கள் மீது அன்பு கொண்ட பொதுவான ரசிகர்கள் பலரை இழந்திருக்கிறீர்கள்.இன்று காலம் மீண்டும் ஒரு வாய்ப்பினை வழங்கி இருக்கின்றது.தொடர் வெற்றிகள் வீடு தேடி வருகின்றன.சிறந்த இயக்குனர்கள் உங்களை இயக்க காத்திருக்கிறார்கள்.அடுத்த சூப்பர் ஸ்டாராக வந்து கொண்டிருக்கிறீர்கள்.நடிகனாக ஜெயித்துக்காட்டுங்கள். கற்பூரம் ஏத்த பால் வார்க்க ஒரு அடிமட்ட ரசிகனாக காத்திருக்கிறேன்.உங்களின் படத்திற்கு முதல் நாள் நான் முதல் ஆளாய் வருகிறேன் நூறாவது நாளும் முதல் ஆளாய் வருகிறேன்.நற்பணி மன்றம் நடத்துங்கள்.தளபதி ரசிகனாய் ரத்த தானம் செய்ய நான் தயார்.உங்கள் பின்னால் அணி வகுக்க தளபதி ரத்தங்கள் தயார்.ஆனால் மீண்டும் சொல்கிறேன் மக்கள் இயக்கம் வேண்டாம் தலைவா…
அடுத்த தொடரில் நடிகர் அஜித்குமார் பற்றிய உண்மைகள்…






Very use information. I have read this ten times . you have reveled some unhidden truth about Vijay . Really proud of you friend
This is the real face of heroism..:(
// I have read this ten times…//appidi ennada vaasichchani…?
aduththa thodarukaka aavalaaka kaaththukondirukeren……. intha savaalai neengal vetriyudan ethir kolla vaalthukkal…………
அடுத்த தொடர் வெகுவிரைவில்…..இணைந்திருங்கள்….